google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜெயலலிதா ஜாமீனும் ட்விட்டர்கள் போராட்டமும்

Tuesday, October 7, 2014

ஜெயலலிதா ஜாமீனும் ட்விட்டர்கள் போராட்டமும்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலை-ஜாமீனுக்காக தமிழ்நாட்டில் அதிமுக அமைச்சர்கள், மந்திரிகள், ,தொண்டர்கள் மட்டுமின்றி  ட்விட்டர்,பேஸ்புக்.....சமுக வலைதளங்களிலும் தொடர் கீச்சுப் போராட்டம்.....

அவைகள் சில நகைச்சுவையாக இருந்தாலும் யதார்த்தமான நிதர்சன உண்மையாக இருந்தது என்று அரசியல் வல்லுனர்கள் அனைவரும் கருதுகிறார்கள் 



✍ மழலை™@WritterMazhalai 
இந்த அடிபொடீஸ் பண்ற அட்டூழியத்துல அம்மாவுக்கு ஒரு பொறிச்ச மீனு கூட கிடைக்க விட மாட்டாங்க. #தட் தாய் பாசத்துல என்னைய மிஞ்சிருவான் போல மொமண்ட்

நாகசோதி நாகமணி @nagajothin 
ஜெயலலிதாவை அந்தமான் சிறைக்கு மாற்றலாம்: விஜயகாந்த்~! என்ன கேப்டன் காலையிலே ஃபுல்லா போட்டாச்சு போல~~~


ℳr. புதுவை குடிமகன்@iamkudimagan 
இது எவனோ சந்துல இருக்கவன் தான் எழுதி குடுத்துருப்பானு அவதானிக்கிறேன் 
SKP Karuna@skpkaruna 
ஒட்டுமொத்த தமிழர்களையும் காட்டு மிராண்டிகளாக, சட்டம் தெரியாத முட்டாள்களாக, நிறுவப்படுவதற்கு முன்னர், தயைகூர்ந்து அந்த ஜாமீனைக் கொடுக்கவும்.
SINGH@VAALAVANTHAAN 
பேசாமா, தலைவி " பில்லா 2" ல தலைக்கு ஜாமீன் வாங்கின மெத்தட் பாலோ பண்ணலாம்...வாங்கிட்டு கோர்ட் வாசல்ல கார்ல ஏறுரீங்க யுவன் பி.ஜி.எம்.மோட..!!

ஜப்பான் ரகு®@japan_raghu 
அம்மாக்கும் ஜால்ரா போட முடியாம தலீவருக்கும் ஜால்ரா போட முடியாம நடுநிலை மாதிரி நடிக்கிற கொடுமை இருக்கே... #தினமலர்
சுபாஷ்@su_boss2 
காவிரியை வேண்டுமானால் வைத்துக்கொள் அம்மாவை விட்டுவிடு.#ஆமாடா..காவிரி உங்க கட்சி மகளிர் அணி தலைவி பாரு.அதை வெச்சுட்டு அம்மாவை விடுறதுக்கு.!

பரிதி @PARITHITAMIL 
73-வது வழக்காக இருக்கும் ஜெயலலிதா ஜாமீன் மனுவை முன்கூட்டியே விசாரிக்க நீதிபதி மறுப்பு. வரிசைப்படி வாங்க இது பிள்ளையார் கோயில் சுண்டலா அய்யா?

மர்ஹபா™ (வலி Jee)@coolguyvali 
வடிவேலு என்ற கலைஞனை திரைத் துறையிலிருந்தே ஒழித்துக் கட்ட எண்ணிய்வர்களுக்கு இன்று அவரின் டையலாக்கே பயன்படுகிறது # கடல்லயே இல்லையாம் ஜாமீன்..
டுவிட்டர் அரசன்@thamizhinii 
இந்த வேலையை யாருபா பார்த்தது... நீங்களாம் நல்லா வரூவீங்கபா.. 

சிறுத்தை™@SaThi_Ya_PrIyAn 
இளவரசி தரப்பு வக்கீல் தனது வாதத்தை எடுத்து வைக்க உள்ளார் # எங்க பேங்க்கு லாக்கர்ல இருந்தா சார்.!!!

பாலா@BA_LA89 
என்னை சந்திக்க வரவேண்டாம்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் #ஜாமின் வாங்கிட்டு வாங்கடான்னா.ஜாங்கிரி வாங்கிட்டு வந்துருக்கான்க மொமன்ட்
காதல் பிச்சைக்காரன் @Corp_Tshirt 
பாலிமரில் ஒரு சட்ட முதலை (950 கிலோ, இருக்கும்), இன்னைக்கு 100த்துக்கு 200% ஜாமின் கன்பார்ம்னு சொன்னாப்புல...அவரதான் தேடிட்டு இருக்கேன்..

மர்ஹபா™ (வலி Jee)@coolguyvali 
அம்மா இஸ் பேக் 2 பரப்பன அக்ரஹாரா # மறுபடியும் மொதல்ல இருந்து உண்ணாவிரதம், மறியல் ஆரம்பிங்க :-P

பேயோன்@ThePayon 
ஜெயலலிதாவுக்கு பெயில் கிடைக்காவிட்டால் என்ன ஆகுமோ என்று பயமாக உள்ளது. நாளைக்குத் தமிழ்நாடு உண்டா?

ரஹீம் கஸாலி அரசர்குளத்தான் 
ரொம்ப நாளா விற்காம கிடந்த பட்டாசை விற்பதற்காக யாரோ ஒரு பட்டாசு கடைக்காரர்தான் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைச்சிருச்சுன்னு கிளப்பி விட்டிருக்கனும்.

ரோபல்காந்த்@roflkanth 
உண்ணாவிரத பந்தல்ல பசி பொறுக்கமுடியாம இருந்த எவனோ ஒருத்தன்தான் ஜாமின் கிடைச்சிடுச்சின்னு கெளப்பி விட்டுருப்பான்.
நாயோன்@writernaayon 
ஜாமீன் கிடைக்கப்போறத உள்ளூர் தலைக்கட்டுகள் வெடி வெடிச்சு கொண்டாடுறாங்க. துக்க வீட்டுக்கு முன்னாடி ஆடுற எஃபெக்ட்.



யோவ்.......பதிவரே!
இந்த ட்விட்டர்கள் போராட்டம் பண்ணி ஜாமீன் வாங்கினாங்களா? வந்த ஜாமீனையும் கெடுத்தாங்களா...? ஒன்னும் புரியலையே 

(மன்னிக்கவும் நண்பர்களே இப்பதிவு 
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க காரணம் ட்விட்டர்கள் போராட்டமே?  என்றுதான் முதலில் எழுதப்பட்டது பின் ஊடக குழப்பத்தால் இப்படி ஆனது...)


              thanks - YouTube by Tamil The HinduTamil The Hindu
இதுவாவது பரவாயில்லை.......
இன்று விடுதலை கிடைத்ததாக வந்த முதல் செய்தியைக்  கேட்டதும் அம்மாவிசுவாசிகளின் இருந்த கொண்டாட்டம்.... இல்லையென்று தெரிந்ததும் உடனே ஆனது திண்டாட்டம் அய்யோ........பாவம் 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1