google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேய்பிறை

Wednesday, December 21, 2016

தேய்பிறை



ஆயிரம் ரூபாய்க்கு 
எத்தனை சைபர் 
என்று தெரியாது 
எங்கிருந்து அய்யா 
நான் 
எந்திரத்தில் தேய்த்து 
பணம் எடுப்பது?

எட்டு ரூபா டீக்கு 
எங்கிருந்து அய்யா 
நான் 
பேடீம்ல் பே பண்ணுவது?

அடிப்படை கல்வியையே 
கற்றுக் கொள்ள 
அடிப்படை வசதி இல்லை 

பண அட்டையை தேய்த்து 
பணம் எடுப்பது எப்போது? 




தேய்ந்து கொண்டிருப்பது 
பண அட்டை அல்ல 

தேய்பிறை ஆனது 
எங்கள்  வாழ்க்கை தான் 
பத்து லட்ச ரூபாக்கு 
கோட்டு சூட்டு போடும் 
பரம ஏழை மோடி அய்யா!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1