google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆலுமா டோலூமா - அர்த்தம் என்ன தெரியுமா?

Sunday, May 29, 2016

ஆலுமா டோலூமா - அர்த்தம் என்ன தெரியுமா?


நடிகர் அஜீத்தின் நடிப்பில் வந்த வேதாளம் படத்தில் வரும் ஆலுமா டோலூமா படப்பாடல் கேட்கும் போது "தல"ய சொரிந்த நமக்கு.....

இப்போது வாட்ஸ்-அப்பில் அருமையான விளக்கம் வந்துள்ளது

முதலில் அனிருத் இசையில் ரோகேஷ் எழுத்தில் வந்துள்ள பாடல் வரிகளை....

"ஆலுமா டோலுமா
ஈசாலங்கடி மாலுமா
பேச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா"

இந்த வரிகளுக்கு பொருளாக.....

ஆல்... என்றால் ஆல மரம்.
டோல்... என்பது டோலக்கு செய்ய உதவும் கடம்பு மரம்.
(ஒரு இடத்தில் ஆல மரமும் கடம்பு மரமும் இருக்கும்மா?)

ஈஸாலங்கடி என்பதை ஈ= இந்த + ஸால்=சாலை + அங்காடி = கடை என்று பிரித்து அர்த்தம் கொள்ள வேண்டும்.

மாலும்மா என்றால் திருமால். திருமால் = பெருமாள் என்ற பெயரை குறிக்கும்

இப்போது  எல்லாவற்றையும் சேர்த்து படித்தால்.........

 ஆலமரமும், கடம்பு மரமும் இருக்கும் இந்த சாலையில் அங்காடி வைத்திருக்கும் பெருமாள் என்ற வியாபாரியே...
என்று பொருள் ஆகும்

பேச்சு கலீஜ் என்றால் கடைக்கு கொள்முதல் செய்ய வரும் நபர் பொருளின் விலையை ரொம்ப குறைச்சு கேட்டு கன்றாவியா பேசினால் என்று பொருள்

அப்படி கட்டுப்படியாகாத விலைக்கு கேட்கும் பார்ட்டியை விட்டால் சாலுமா. சாலுமா என்றால் போதும்மா என்று பொருள்.

 இப்ப எல்லாத்தையும் சேர்த்து படித்தால்....

 ஆலமரமும், கடம்பு மரமும் இருக்கும் இந்த சாலையில் அங்காடி வைத்திருக்கும் பெருமாள் என்ற வியாபாரியே உன்
கடைக்கு பொருள் வாங்க வரும் நுகர்வோர் உனக்கு கட்டுப்படியாகாத விலைக்கு பொருளை கேட்டால் அவரிடம் நீ வியாபாரம் செய்யாமலிருப்பதே சிறந்த செயல்

ஆகா.....எவ்வளவு அருமையான தத்துவம் சொல்லி ஆடுகிறார்...
 அப்பப்பா நம்ம தல
சூப்பர் தல தாம்ப்ப்ப்பா

அடுத்து......

"அரிக்கல்லு கரிக்கல்லு 
கொத்துவுட்டா கலக்கலு 
பளுச்சினு பளபளக்குது 
மிட்டா மேல Local-u" 

இதன் விளக்கமாக.....

அரிகல்லு என்றால் அரிதான கல். (பவளம், வைரம் அந்த மாதிரி அரிதான கல்.)

தெரிகல்லு என்றால் தெரு ஓரத்தில் கிடக்கும் கருங்கல்.

கொத்து விட்டா கலக்கலு என்றால் கருங்கல்லை கொத்துவது.

அதாவது சிற்பி சிலை வடிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்.

இப்ப இரண்டாவது கருத்தை எல்லாரும் சேர்த்து படியுங்க.......

 தெரு ஓரத்தில் கிடக்கும் கருங்கல்லை போன்று உன்னை நீ கேவலமாக நினைக்காதே.

தன்னிடமிருக்கும் வேண்டாத எண்ணங்களை அறிவு என்னும் சிற்பி கொண்டு உன்னிடமுள்ள வேண்டாத எண்ணங்களை நீ கொத்திவிட்டு நீக்கினால்.......

 உன் மதிப்பு அரிதான கற்களான வைரம், பவளம், புஷ்பராகம் போல் உயர்ந்து விடும்.


இதுபோலவே மற்ற பாடல்வரிகளையும் அர்த்தம் கூட்டி பொருள் தெரிந்து கொள்ளுங்கள் 
தெரியலயா...? தொல்காப்பியரிடம் கேளுங்கள்!!

ச்சே எப்பேர்ப்பட்ட உயர்ந்த தத்துவப்பாட்டு இது..!!!
*தமிழை எப்படியாவது வளர்த்துடுவோம்ல*

நன்றி......
#Whatsapp #அருண்வினோ
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1