google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கவிஞர் அப்துல் கலாம்

Friday, July 31, 2015

கவிஞர் அப்துல் கலாம்


இந்திய முதல் குடிமகன்,இந்திய விஞ்ஞானி,ஏவுகணை நாயகன்,பொறியாளர், தமிழறிஞர், ஆசிரியர்... போன்ற பல  முகங்கள் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் ஒரு சிறந்த கவிஞரும் ஆவார்

திருக்குறள் மீது தணியாத பற்று கொண்டிருந்த அப்துல் கலாமின் கவிதைகள் அனைத்தும் வாழ்க்கை நெறிமுறைகள் நிறைந்த சிறந்த பொன்மொழிகள் ஆகும் அவைகளில் காந்தியக் கொள்கைகள்,மரம் வளர்க்கும் சிந்தனைகள் மட்டுமே பிரதானமாக  பிரதிபலித்தன 

சில ஆங்கில வடிவிலும் வந்துள்ளன 
அவருக்கு பிடித்தமான "நான் ஏறிக்கொண்டு இருக்கிறேன் உச்சி எங்கே",போன்ற சில கவிதைகள் பிரபல கிதார் இசை கலைஞர் மோகித் சவுகான் அவர்களால் "பட்டு பாதை" (சில்க் ரூட்)இசை ஆல்பமாக வந்துள்ளன 

மறைந்த தனது  அன்னையை நினைத்து  அவரது அக்னிச சிறகுகள் நூலில்  எழுதிய கவிதை........

கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!.......


என்று ஆரம்பித்து...

உன் அன்பும், ஆதரவும், நம்பிக்கையும்
எனக்கு வலிமை தந்தன
அதைக் கொண்டே நான் இந்த உலகை
அச்சமின்றி எதிர்கொண்டேன்

என் அன்னையே,
நாம் மீண்டும் சந்திப்போம்
அந்த மாபெரும் நியாயத் தீர்ப்பு நாளில்!


.....என்று முடியும் கவிதை வரிகள் நம் இதயத்தை உருகச் செய்யும் 


இளைஞர்களுக்கு தன்நம்பிக்கை ஊட்டும் செய்திகள் மட்டுமே அவரது கவிதைகளின் கருவாக இருக்கும் 

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பி னால்,  
நீ யார் என்பது முக்கியமல்ல;
 உனது மனது எதை விரும்புகிறதோ,  
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்

மாணவ,மாணவிகள் மத்தியில் உரையாற்றும் போதெல்லாம் அவர் தன் நம்பிக்கை வரிகள் நிறைந்த கவிதைகளை பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை 























நான் பிறந்தேன் 
ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒரு போதும் 
தவழமாட்டேன்,
தவழவே மாட்டேன்,
ஆகாய உச்சிதான் என் லட்சியம்,
பறப்பேன், பறப்பேன், 
வாழ்வில் 
பறந்து கொண்டே இருப்பேன்.




இது போன்ற எண்ணற்ற வாழ்க்கை கவிதைகளை படைத்துள்ள டாக்டர் அப்துல் கலாமின் கவிதைப் பொன்மொழிகள் இணையதளம் முழுக்க பூத்துக் கிடக்கின்றன 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1