google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் கலாய்த்தல் காமெடி(#JustMissedSaami )

Wednesday, May 20, 2015

ட்விட்டர் கலாய்த்தல் காமெடி(#JustMissedSaami )


இன்றைய சமுக வலைத்தளமான ட்விட்டரில் #JustMissedSaami என்று டேக் போட்டு திருமண விழாவில் மணமகன் கையில் கொடுக்கவேண்டிய தாலியை தவறுதலாக மணமகள் கழுத்தில் கட்ட சென்ற ஓர்  அரசியல் பிரமுகர் பற்றிய நக்கலும் விக்கலுமாக நையாண்டி ட்விட்டுகள்.......


                                       thanks-YouTube by News7 Tamil

நேத்ரா அப்பா@SankarShri 
அந்த மாமி மட்டும் தடுக்கலைனா.......
சாமிக்கு இந்நேரத்துக்கு கல்யாணம் நடந்திருக்கும்.

திரு@thirumarant 
இப்பவாவது தெரியுதாய்யா வீரமணி ஏன் தாலிய ஒழிக்க போராடுறார்ன்னு 

நாகராஜசோழன்@kandaknd 
தாலி அறுப்பு நிகழ்ச்சியை எதிர்த்து வீரமாக தாலிகட்டும் போராட்டதில் ஈடுபட்டதால் நீ தாலி காத்த காளியப்பன் என்று அழைக்கபடுவாய்

Ganesh Ezhumalai@eganesh86 
சுனாசாமிய இனிமேல் நேரா பந்தியில உட்கார வெச்சி அப்படியே அனுப்பிடுங்க.. தப்பி தவறிக்கூட மணமேடைல ஏத்திடாதீங்கப்பு..

தேன்மிட்டாய்@Ohmslaw_ 
"மாங்கள்யம் தந்து நானே"ங்றத சூனாபானா தப்பா புரிஞ்சுகிட்டாரு போல.அடப்பாவமே எவ்ளோ வெகுளியா இருக்காரு.!!
Mani@manivel45 
மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சு.சுவாமி. இது அவரது சொந்த முயற்சி.இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - தமிழிசை .

நதி முகம் @nadhimugam 
இப்ப ரொம்ப டென்சனா இருப்பது ஸ்டாலின் தான் இவர நம்பி கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருக்கோம் தாலியை கண்ணுல காட்டிட கூடாது

ஞான வெட்டியான்@gnanavettiyan 
மாப்பிள்ளையோட நிலமைய நினச்சா தான் சிப்புசிப்பா வருது ... இனி அந்தாளோட கட்சில இருப்பாப்லயா?

நாகராஜசோழன்@kandaknd 
இந்த தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் தாலிகட்ட கிளம்பிய இந்த முதியவரை பிடித்தால் Rt செய்யவும்

புத்திகாலி @Tottodaing 
இனி எவனா இருந்தாலும், தாலி கட்டுனதுக்கு அப்புறமாத்தான் அரசியல்வாதிகிட்ட ஆசீர்வாதம் வாங்கப் போவான்.. சாமிடா.. மந்திரம்டா..

வேற்று க்ரஹ வாசி@AlienID420 
யோவ் விஜய் டிவி நீங்கதான் கண்டது கடையதுக்கெல்லாம் விருது குடுப்பீங்களே இந்த ஆள் பண்ண சாகசத்துக்கு எதுனா விருது குடுங்க

பாஹவதர்@im_bahavathar19 
என் கல்யாணத்துல ஐயர கூட தாலி எடுத்து தர சொல்ல மாட்டேன்பா ஆத்தி செத்த நேரத்துல கலங்கடுச்சுடுறானுவ

மருதாணி@RedManoRed 
தர்மத்தின் வாழ்வை சூது மட்டுமல்ல 
சு.சாமி கூட கவ்வுவார் போல...!!


கவி தா@kavitha129 
வீரமணி அவர்களே... இனிமேலே தாலி கட்றவங்க சு.சாமியை கூப்பிட்டுதான் கட்டிக்கணுமினு சொல்லிடுங்! தொலைந்திடும் தாலிக் கலாச்சாரம்
 

ஐ கிங்@kaush_king 
அட நான் என்ன தப்பு பண்ணேன் மாப்பிளைக்கு எப்படி தாலி கட்டனும்னு சொல்லி குடுக்க போனேன் இதுக்கு போயி தமிழ்நாடே.

நுண்மதியோன்@Nunmathiyon 
பிரபலம் என்று திருமணத்திற்கு அழைத்துத் துன்புறுத்தும் கலாச்சாரத்தை வேரறுக்க வந்த வேந்தே நீவீர் வாழ்க

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
தாலி எடுத்து கொடுக்க சென்று மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சுப்பிரமணிய சாமி| # நல்ல வேளை.கல்யாண முகூர்த்தத்துக்கு மட்டும் தான் அழைப்பு

என்னயா செஞ்சான் என் கட்சிக்காரன் காலைல சுகர் மாத்திர போடாதனால கை லைட்டா நடுங்கிடிச்சி :))) அதுக்குனு 


கிருபா கரன்@ckirubadpi
 யோவ்....மாப்பிள்ள சீக்கிரம் தாலிய கட்டுய்ய்யா உங்க கல்யாணத்துக்கு சு... சாமி வந்துக்கிட்டு இருக்காராம்

pic.twitter.com/fNx3LNdSQk




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1