google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க (ட்விட்டர் மோடுமுட்டி)

Sunday, March 29, 2015

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க (ட்விட்டர் மோடுமுட்டி)

இங்கே வாங்க உங்க கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு போங்க சினிமா நடிகர் சிங்கம் புலி (dp) படத்துடன் ட்விட்டரில் நகைச்சுவை,நையாண்டி,பகடி என்று பலவித காமெடியில் கலக்கும் நண்பர் மோடுமுட்டி @gurussiva.............

என் கீச்சுக்கள் வெறும் கற்பனையே,
பிடிக்கலேன்னா காரி துப்பிட்டு போய்கிட்டே இருங்க,
புருவத்த உசத்துறது,பூமிய கிளறது , நெஞ்ச நிமித்துறது 
எல்லாம் வேஸ்ட், மீ டம்மி

என்று அவரது சுயவிவரப் பக்கத்தில் அதிரடியாக அடிச்சி சிரிச்சி சொல்கிறார் 

குறைந்த ட்விட்டுகள் மட்டுமே அவரது பக்கத்தில் இருந்தாலும் அவரது கீச்சுக்கள் அத்தனையும் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் 

அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் சொந்த db வைக்காததற்கு விளக்கம் அளிக்கிறார் இப்படி.........
                                                     மோடுமுட்டி @gurussiva 
நம்மெல்லாம் சொந்த DP வைக்கலாம், தீடிர்னு ஜாக்கு பய அவன் தங்கச்சிய நம்மளக்கு கட்டி வச்சிட்டா பிறகு அலியா பட் வாழ்க்கை என்னாவது?

அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றிய அவரது கீச்சு................
மோடுமுட்டி @gurussiva 
ஈ லோகத்தில் தந்தைக்கு செலவு வைக்காத பொறுப்பான மகள் ஓன்று உண்டெங்கில் அது ஸ்ருதிஹாசனாக்கும், எல்கேஜி ல வாங்கின டிரஸ்ஸை இன்னமும் போடுது

சித்த வைத்தியத்தின் அருமை பெருமையை நையாண்டி செய்யும் அவரது குறும் பதிவு..............
மோடுமுட்டி @gurussiva 
வல்லாரை சாப்பிட்டா ஞாபக சக்தி அதிகரிக்குமாம் ,போனமாசம் வல்லாரை சாப்பிட்டேன் அது மட்டும் தான் ஞாபகத்தில் இருக்குது,மத்ததெல்லாம் மறந்து போச்சு

பிரதமர் மோடியின் உலக சுற்று பயணத்தைப் பற்றிய அவரது (ப)கடி கீச்சு...... 
மோடுமுட்டி @gurussiva 
பிரபு சாலமன் சத்தமே இல்லாம மோடி வாழ்க்கையே தத்ரூபமா "கயல்"ன்னு படமா எடுத்துட்டாரு # பறவையா பறக்கிறார்,காத்துல மிதக்கிறார்
  
அறிவியல் மேதை நியூட்டன் இந்தியாவில் பிறந்தால் என்னவாயிருப்பார் என்ற அவரது சிந்தனை.............
மோடுமுட்டி @gurussiva 
நல்லவேள நியூட்டன் இங்கிலாந்துல இருந்ததால விஞ்ஞானி ஆனாரு,இந்தியாவுல இருந்திருந்தா,ஆப்பிள்மரம் போதி மரமாகிருக்கும்,நியூட்டன் புத்தனாகிருப்பார்

சமுகத்தில் நடக்கும் ஒரு சாதாரண நிகழ்வு அவரது கீச்சில் நையாண்டி செய்யப்படுகிறது..........
மோடுமுட்டி @gurussiva 
"நம்பிக்கை தான் வாழ்க்கை"ன்னு தத்துவமெல்லாம் பேசுறான், பேனா கேட்டா மட்டும் மூடிய கழட்டிட்டு தான் கொடுக்குறான், நம்ம மேலஅம்புட்டு நம்பிக்கை

மோடுமுட்டி @gurussiva 
பெண் வீட்டை விட்டு வெளியேறும் போதும், ஆண் வீட்டுக்குள் நுழையும் போதும் நடிக்க தொடங்கி விடுகிறார்கள்

மோடுமுட்டி @gurussiva 
பொண்ணுங்க இந்த ஒண்ணுக்காவது பயபடட்டும் நினச்சு தான்,கடவுள், கரப்பான் பூச்சிய பிங்க் கலர் ல படைக்கல #HappyWomensDay

மோடுமுட்டி @gurussiva 
வழிப்பறி கொள்ளையை பற்றி தெரியாதவங்க, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்ல போனீங்கன்னா தெரிஞ்சிக்கலாம்

மோடுமுட்டி @gurussiva 
எவ்வளவோ மூட நம்பிக்கை இருக்கு, அதில ஒன்னா, பொது இடத்துல எச்சில் துப்பினா சாமி வாயில குத்தும்ன்னு சொல்லி வளர்த்து இருக்கலாம்

மோடுமுட்டி @gurussiva 
கிளீன் இந்தியா வேணும்னு அடம்பிடிக்குற சமூகம்தான் ரோட்டுல தேங்காயையும்,பூசணிக்காயையும் உடைச்சிட்டு திரும்பி பார்க்காம வீட்டுக்குள்ள போயிருது


காதல் பற்றிய அவரது கீச்சுப் பார்வை............
மோடுமுட்டி @gurussiva 
சும்மாவா ! தாஜ்மஹால உலக அதிசயமா தேர்ந்து எடுத்திருக்காங்க, இந்தியாவுல உண்மைக்காதல் எப்பவாச்சும் அதிசயமா நடக்கும் அதனால தான்

கடவுள் பற்றிய அவரது சிரிப்பூட்டும் குறும் பதிவு..... 
மோடுமுட்டி @gurussiva 
ரோட்டுல போகிற கார்ல, பாதி கார் கடவுள் கொடுத்த கிப்ட்டா தான் இருக்குது, நாம உண்டியல்ல போடுற காசை எடுத்து அவங்களுக்கு கிப்ட் பண்ணுறாரோ?

ரயில்வே பட்ஜெட் சமயத்தில் அவரது நையாண்டித்தனம்.......
மோடுமுட்டி @gurussiva 
இந்த ரயில்வே பட்ஜெட்ல,அப்பர் சீட்க்கு எதாவது லிப்ட் வச்சு கொடுத்தா நல்லா இருக்கும்,ஒவ்வொருதடவையும் ஏறுறதுக்குள்ள நாலைஞ்சு தையல் விட்டுருது

தமிழ்நாடு டாஸ்மாக்கையும் விட்டுவைக்கவில்லை...........
மோடுமுட்டி @gurussiva 
மதுவே வேண்டாம்னு சொன்ன அந்த மனுசனை தினமும் டாஸ்மாக்க்கு கூப்பிட்டு போய் கல்லாவுல இறக்கி விட்டுறாங்க பாவிபயலுக #கரன்சியில் காந்தி

மோடுமுட்டி @gurussiva 
குடிச்சிட்டு டிரைவ் பண்ணுறவங்களுக்கு பைன் போடுற மாதிரி, குடிக்காம வர்ற என்போல நல்லவங்களுக்கு ஒரு பத்மஸ்ரீயோ,பத்மபூசனோ கொடுத்து கௌரவிக்கலாம்ல

மோடுமுட்டி @gurussiva 
தினமும் போலீஸ் ஊத சொல்லும் போது பயத்தில தான் ஊதுறேன்,ஊதபோய் எச்சில் தெறிச்சு ஆசிட் வீச்சுன்னு நாலைஞ்சு வருஷம் உள்ள தூக்கி போட்டுட்டாங்கன்னா

பெண்களின் தன்னம்பிக்கை பற்றிய நகைச்சுவை பார்வை........
மோடுமுட்டி @gurussiva 
பெண்களோட தன்னம்பிக்கை எந்த அளவுக்கு அற்புதம்னா, லட்சம் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கினாலும், பிரேக்கை நம்பாம தன் காலால் தான் நிறுத்துவாங்க

அவரது பார்வையில் ஏன் மின்தட்டுப்பாடு வந்துச்சு தெரியுமா...?
மோடுமுட்டி @gurussiva 
கூடங்குளம் அணு உலைய ஆரம்பிச்சதுக்கு பதிலா, ஆண்ட்ராய்டு போன்களை ஸ்டாப் பண்ணிருந்தாலே போதும் மின்தட்டுபாடே வந்திருக்காது

நகரத்தில்நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்..........
மோடுமுட்டி @gurussiva 
வீட்டை பூட்டிட்டு போறீங்க,சரி!, WIFIயையும் அநியாயமா ஆப் பண்ணிட்டு போறீங்களே, இது தான் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நீங்க கொடுக்குற மரியாதையா?

நம் நாட்டு அரசியல்  மற்றும் அரசியல்வாதிகள் பற்றி..........
மோடுமுட்டி @gurussiva 
MBBS படிக்காதவர் போலி டாக்டர்ன்னா, பொலிடிகல் சயின்ஸ் படிக்காதவர் போலி அரசியல்வாதி தானே,அநேகமா கஞ்சா கேஸ்ல உள்ள போவேன்னு நினைக்குறேன்

மோடுமுட்டி @gurussiva 
2020ல பணக்காரன் ஏழை என்ற ஏற்றதாழ்வே இருக்காது,பொருளாதாரநிலை இப்படியே இருந்தா பூரா பயல்களும் ஏழை ஆகிடுவாங்க,எனக்கெல்லாம் எந்த கோவில் வாசலோ?

மோடுமுட்டி @gurussiva 
நீர்யானைக்கு ஆங்கிலத்தில் வாட்டர் எலிபண்ட்ன்னு குழந்தைக்குசொல்லி கொடுத்தது ஒரு குற்றமாயா? பேரன்ட் மீட்டிங்ல டீச்சரமா என்மானத்தா வாங்கிருச்சு

மோடுமுட்டி @gurussiva 
கைகால் நல்லாதானே இருக்கு உழைச்சு வாழ வேண்டியது தானே என பிச்சைகாரனிடம் கூறும் இதே வார்த்தை தான் கோவிலில் சாமி நம்மிடம் சொல்லி இருக்க வேண்டும்

இதுபோன்ற நாட்டில் நடக்கும் சமுக,சினிமா,அரசியல் நிகழ்வுகளை சிரிப்பு நடிகர் சிங்கம் புலி பேச்சு,சிந்தனை நடையில் நையாண்டியாகச் சாடும் மோடுமுட்டியின் குரும்பதிவுகள் அனைத்தும் தமிழ் ட்விட்டர் உலகில் பிரபலம் 

இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால்........ 
இந்த ட்விட்டை RT செய்து உங்களை சிரிக்க வைத்த நண்பர் மோடுமுட்டியை பெருமை படுத்துங்கள்  



நன்றி........... மோடுமுட்டி @gurussiva 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1