google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: (ஏ)மாற்றி யோசி

Thursday, March 5, 2015

(ஏ)மாற்றி யோசி

அண்ணேன்...பெரிய  அண்ணேன்
எல்லோரும் மாற்றி யோசி என்பாங்க அதென்ன நீங்க ஏமாற்றி யோசி என்கிறீங்க ஒரே குயப்பமா இருக்கே வலது கையால சாப்பிடுறத அந்த கைக்கு தெரியாம ஏ... மாற்றி நான் சில நேரம் பீச்சாங் கையால சாப்பிடுரத சொல்றீங்களா......?
அடேய் தம்பி  எப்படி சாப்பிட்டா என்னடா...
நா அதச் சொல்லலடா நாட்டுல நடக்கிற நிகழ்வுகள சொல்றேன்டா 
உன்கிட்ட சில கேள்விகள கேட்கிறேன் சொல்லுபாப்போம் 

இன்னைக்கு இந்தியாவிலே பெரிய பணக்காரர் யாரு....?

-அட இது தெரியாதா உலகத்திலனா பில்கேட்ஸ் இந்தியாவிலனா அது நம்ம அம்பானி ஹி.....ஹி 

அட போடா புண்ணாக்கு....... அம்பானி உங்க மச்சானாடா...
 இன்னைக்கு இந்தியாவுல பெரிய பணக்காரர் திலிப் சங்வி (Dilip Shanghvi) னு Sun Pharmaceuticals மருந்து கம்பெனி வச்சிருக்கிறவரு நம்ம நாட்டுல அம்புட்டு நோயாளிக இருக்கிறாயிங்க அதுதான் அவரு பெரிய பணக்காரராயிட்டாரு

பரிதி என்ன சொல்றாருன்னு கேளு.....
அத விடுங்க அண்ணேன்....#Banbeef-னு நம்ம ட்விட்டர்லாம் புலம்புறாங்க மாட்டுக்கறி திங்ககூடாது மட்டன் திங்கலாம்னு ஏதோ ஒரு மாநில அரசு சொல்லுதாமே.. அது சரியா...?  

இதுக்கும்  நம்ம பரிதி சொல்றத கேளு.......
அது இல்ல அண்ணேன்...இதுல ஏதோ மதம் சம்பந்தமா உள்குத்து இருக்காமே 
  அடேய்...தம்பி இதுக்கும் அவரு என்ன சொல்றாருனா...

பிரதமர் மோடி 29 ரூபாய் கைகாசு கொடுத்து   சாப்பிட்டாருனு எல்லா பத்திரிகையிலும் செய்தி போட்டாங்களே உண்மையா...?

ஆமாம் தம்பி...... அவரு கோட்டு போட்டாலும் செய்தி சோறு தின்னாலும் செய்தி என்னத்தச் சொல்றது...? இதையும் பரிதிகிட்டயே கேளு......


அட போங்க அண்ணேன்.....எல்லாமே ஏட்டிக்கு போட்டியாய் சொல்லுறீங்க இது அந்தக் கடவுளுக்கே அடுக்காது....ஆங் நான் கடவுளுக்கு பயப்படுறவன்

அடேய்...நான் கடவுளுக்குத்தான் பயப்படுவேன் என்று 
சொல்பவன்தான் உண்மையான நாத்திகன்  
கடவுள் இல்லைன்னு மனசுல நம்புறவன்  
கடவுள் இருந்தால் அப்படி சொல்லமாட்டான்

இன்னும் கேளு தம்பி கேளு..........

-பெண்கள் காசுக்கு தன்னை விற்றால் அது"விபச்சாரம்" 
ஆண்கள் காசுக்காக தன்னை விற்றால் அது "புது மாப்பிள்ளை"

-உங்கள் பேச்சில் திமிர் இருக்கட்டும் 
உங்கள் நடத்தையில் மிடுக்கு இருக்கட்டும் 
சிங்கத்திடம் மட்டுமே இவைகள் இருக்கும் 
சிறு நரிகளிடம் இருக்காது

-மற்றவர்கள் உருவாக்கிய பாதையில் போனால் வெற்றி நமக்கல்ல நாமாக ஒரு பாதையை உருவாக்கி போனால் தோல்வி நமக்கல்ல

-மற்றவர்களைவிட நீங்கள் உயர்ந்தவராக நினையுங்கள் ம்ம்ம்ம்....நீங்களே நினைக்கவில்லை என்றால் 
வேறு யாரு உங்களை பெரிய ஆளாக நினைப்பார்கள் ?

-நான் புடிச்ச முயலுக்கு மூனு காலுதான் என்று 
யாரேனும் வாதாடினால் நம்புங்கள் ம்ம்ம்ம்..
அந்த முயல் பிறவியிலேயே மூனு கால்களோடு பிறந்திருக்கலாம்

-எந்தப் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுபவன் நயவஞ்சகன் எதிர்த்து நின்று போராடி ஜெயிப்பவனே நல்லவன்

-தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்பது அகந்தை அல்ல 
அதுதான் தன்னம்பிக்கை வெற்றியின் அடையாளம்

-நீங்கள் எவ்வளவு தூரம் அடுத்தவர்களால் அவமதிக்கப் படுகிறீர்களோ அவ்வளவு உயரம் முன்னேறுவீர்கள் 

-எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா நான் காப்பாத்துறேன் என்று காதலனிடம் சொல்வதில்லை

சரி....மொக்க போடாதீங்க அப்புறம் இந்தப் பக்கமே வரமாட்டேன் 
குஷ்பூவோட  காங்கிரஸ்  கட்சில சேரப் போறேன் நீங்க வர்றீங்களா...?

அடேய்....விடுடா எனக்கு அரசியல் எதுவும் தெரியாதுப்பா என்ன வம்பில மாட்டிவிடாதே இதையும் அவருகிட்டே கேளு........

அட போங்க அண்ணேன்....நா உங்க கிட்ட கேட்டா நீங்க பரிதிகிட்ட கேளு என்கிறீங்க பேசாம அவரு ட்விட்டர்ல நான் சேர்ந்துக்கிறேன் 

பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1