google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஜெயலலிதா கைது-நடந்தது என்ன?

Monday, September 29, 2014

ஜெயலலிதா கைது-நடந்தது என்ன?

மிழக முதல்வர் ஜெயலலிதாவின்  சொத்து குவிப்பு வழக்கில் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பின்னணியில்........
 கர்நாடகா காங்கிரஸ்,பாஜக,திமுக என முப்பெரும் சக்திகளின் சதித்திட்டங்கள்  உள்ளதாக பேசப்படுகிறது

கர்நாடகா காங்கிரஸ் சதித்திட்டம்........
தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் இடையில் நீண்ட வருடங்களாக நிலவிவரும் காவேரி பிரச்சனையில்  பல போராட்டங்களை செய்துள்ள ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதன் மூலம் இனி  காவேரி பிரச்சனையில் எந்த கேள்வியும் மேல் முறையீடும் வர வாய்ப்பில்லை என்பதுடன் இனி வரும் எந்த தமிழக முதல்வர்களும் கர்னாடக அரசை கண்டு அஞ்சுவார்கள் என்பதும் முக்கிய காரணம் 

பாஜகவின் திட்டம்........
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டை தவிர பாஜக  பெரும்பான்மையான இடங்களை இந்தியாவில் பிடிக்க........சுப்பிரமணிய சாமி போன்றவர்களால் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்ட, நாளைய பிரதமர் ஜெயலலிதா என்று போற்றப்பட்ட  பெரும்பான்மையான அதிமுகவின் செல்வாக்கை உடைக்கவே........
தமிழ்நாட்டில் தங்கள் கட்சியின் வேர் ஊன்றவே............ 


திமுக-வின் சதித்திட்டம்.........
தொடர்ந்து தேர்தலில் தோல்வியை சந்தித்துக்கொண்டிருக்கும் திமுக  சதிவலையாக விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றியும் திறமையான வக்கீல்கள் மூலம் ஆதாரங்களை திரட்டியும் கேஸை வலுப்படுத்தி தனக்கு தேர்தலில் எதிர்ப்பு இல்லாமல் செய்ய செய்த  சதித்திட்டம் என்றும்..........

ஆனாலும் இவைகளை மறுத்து...... 
உப்பு தின்னவர் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்ற பழமொழி போன்று தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற ரீதியில் இது நீதியின் தீர்ப்பு
நீதியின் தீர்ப்பு...........
ஆட்சி பொறுப்பில் முக்கிய பதவியில் இருப்பவர்கள் செய்யும் ஊழல் ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு வித்திடும் என்பது போல் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா சொல்லியிருப்பது...
அதுபோல் வெளிப்படையாக தெரிந்த ஜெயலலிதாவின் ஆடம்பர அரசியல் வாழ்க்கை, ஆணவமிக்க பேச்சு, ஊழலை ஆதரிக்கும் பண அரசியல், முன்கோபமான நடவடிக்கைகள்...இவைகளே முக்கிய காரணம்  


உங்கள் பார்வையில்............

ஜெயலலிதாவின் கைதுக்கு காரணம்....?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........


ட்விட்டர்கள் பார்வையில்..................


வேலைவாய்ப்பு தகவல் @gokula15sai 
நீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் உண்ணாவிரதம் நடத்துபவர்களுக்கு MGR நடித்த நீதிக்கு தலைவணங்கு படத்தை ஒளிபரப்பலாம்!


மர்ஹபா™ (வலி Jee)@coolguyvali 
ஜெ வை சந்திக்க சென்ற சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு..!# அங்கே போயி நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுனு கத்தி இருப்பாரு....

உளவாளி @withkaran 
அம்மாவுக்கு ஆதரவு தெரிவித்து அக்2 அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்.


Pradeesh @gpradeesh 

ஜெ. சொத்துக் குவிச்சு ஜெ. தண்டனை வாங்குனதுக்கு கருணாநிதியத் திட்ற மக்கள் இருக்கும் வரை அம்மா தான் நிரந்தர முதல்வர் ;-)

ℳr.ℳ.. @imathan_ 
66கோடிக்கே 18வருசம்னா 1.76லட்சம் கோடிக்கு தீர்ப்பு வரதுக்குள்ள நாமெல்லாம் போயே போயிருவோம் அப்றம் என்னத்துக்கு கவலப்பட்டுகிட்டு.;) #தலீவர்;)

 நாயோன்@writernaayon 
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.. கருகத் திருவுளமோ? 

விசிறி மட்டை@kathiRsamy 
அந்த ஆளு 20ம் தேதியே தீர்ப்பு சொல்லிருப்பான்.அப்பவே பெயில்ல வந்திருக்கலாம்.நான் தலைகீழாகதான் குதிப்பேனு 27ம் தேதி கேட்டு வாங்குனீங்க.

சிறுத்தை™@SaThi_Ya_PrIyAn 
ஜெயலலிதாவுக்கு தண்டனை:அதிமுகவினர் தீக்குளிப்பு; 14 பேர் உயிரிழப்பு! # இவ்ளோ நாளா சோறுக்கு பதிலா வேற எதையோ திண்ணு வளந்துருப்பாய்ங்க போல..

இரண்டாம்துக்ளக்@2amtughluq 
வன்முறையில் ஈடுபடும் அதிமுகவை தடை செய்யவேண்டும் #ராமதாஸ் #பழிக்கு பழி வாங்குறாராம்


பரிதி@PARITHITAMIL 
நிருபர்-ஜெ. தண்டனை குறித்து உங்கள் கருத்து...? 
தலைவர்-ப்ப..பெப்பப்ப ... (நேத்து இருந்து தலைவருக்கு நாக்குல சுளுக்கு அய்யா ...ஆள விடுங்க)

குணா யோகச்செல்வன்@g4gunaa 
அய்யய்யோ.. நாமளும் அழுகாட்டி அமைச்சர் பதவிலேர்ந்து தூக்கிடுவாங்களே.. போனவருசம் செந்துப்போன ஆயாவ நெனச்சிக்குவோம்~


ℳr. சன்னியாசி@iam_moorthy 
அம்மா வாட்டார், அம்மா உணவகம், அப்பா உப்பு வரிசையில் இனி பன்னீர் சோடா வரும் என கூறிக் கொள்கிறேன்...

கத்தி UPGRADE'C.M'@doll_fb 
ஜெயலலிதாவின் வழக்கில் தலையிட மாட்டேன் என பிரதமர் மோடி கூறியதாக #SubramanianSwamy தகவல்.. #இவரு இந்திய பிரதமரோட"மைன்ட் வாய்ஸ் போல??

உடன்பிறப்பே @udanpirappe 
நல்லவேளை ஓபிஎஸ் அழுத வீடியோ ரைட்ஸ் விஜய் டிவிக்காரனுக்கு கிடைக்கலை ,கிடைச்சிருந்தா டெய்லி ஓடவிட்டு ஹெவி கலக்சன் பார்த்திருப்பான்


மர்ஹபா™ (வலி Jee)@coolguyvali 
பிரச்சாரம் செய்யவில்லை, ஓட்டுக்கு 200குடுக்கவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை,இன்று முதல்வர் நாற்காலியில் # குனிந்தால் நாட்டை ஆளலாம்
வால்டர் வைரவன்@raajeswaran 
ஜே.மீது இங்கு ஏற்பட்டிருப்பது அனுதாபம் மட்டுமல்ல.. பல பெரிய ஊழல் முதலைகள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லையே என்ற ஆதங்கமும் தான்!

எபோலோ நைனா@naiyaandinaina 
இந்த தீர்ப்பாலே ஒன்னு தெரிஞ்சது; எல்லாவனுக்குள்ளேயும் ஒரு சட்டவல்லுனன் ஒளிஞ்சிருக்கான்.ஒரு டீக்கடை சலூன் பக்கம் போக மிடிலெ  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1